tamilnadu

img

மின்சார உபகரணங்கள் கொள்முதல் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு  திட்டப்பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாகக் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள சர்வதேச ஹாக்கி மைதானம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது : 

தமிழகத்தில்  விளையாட்டுத் துறையை மேம்படுத்தி,  இந்தியாவின்  விளையாட்டு தலைநகராகத் தமிழகம் அமையும் வகையில் துணை முதல்வர் செயல்பட்டு  வருகிறார்.  அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்ட ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை ஏற்றுக்  கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணிகள் நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் ரூ.935 கோடி மதிப்பீட்டில்  பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் மாநகராட்சி பகுதி நடைபெற்று வருகிறது, அதன் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறோம்.

புதிய பணிகளும் கோவையில் நடைபெற்று வருகிறது.   கோவையின் வளர்ச்சிக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். சாலை அமைப்பதற்கு ரூ.200 கோடி சிறப்பு விதியை வழங்கி உள்ளார். சாலை அமைக்கும் இடங்களில் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   மாநகராட்சி பகுதிக்குள் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்களின் கோரிக்கை உள்ளது அதன் அடிப்படையில்தான் சர்வதேச மைதானமும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகிறது.  கடந்த அஞ்சு வருடத்துக்கு முன்பு சாலை அமைத்து இருந்தால் இப்போது சாலை போடத் தேவை இருந்திருக்கிறது. கூடத்து வாரியாக கணக்கெடுக்கப்பட்டு சாலைப் பணிகள் தொடங்கியுள்ளது. 

குனியமுத்தூர் பகுதியில் சாலைப் பணிகளை விரைந்து முடித்து விடுவோம் அதற்கான நிதி வந்துள்ளது.  மின்சாரம் துறை சார்பில் கொள்முதல் செய்யப்படக்கூடிய அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் வாயிலாக டெண்டர் விடப்பட்டு வாங்கப்படுகிறது. அதற்கு எனக் குழு கமிட்டி உள்ளது அவர்கள் விலைப்பட்டியல் நிர்ணயித்து பின்பு தான் உத்தரவு வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. 

கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட முறைகள் தான்  பின்பற்றப்பட்டது. இதில் யாருடைய தலையிடும் இருக்காது.   உயர் அதிகாரிகள் உள்ள கமிட்டியில் எந்த தவறும் நடக்காது. குறுகிய மனப்பான்மையுடன் சிலர் செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டுள்ளனர். பத்திரிகை விற்பனை செய்ய யாரைப் பற்றி எழுதினால் விற்கும் என அவர்களைப் பற்றித் திட்டமிட்டு எழுதி உள்ளார்கள். அரசு சார்ந்த நிகழ்ச்சியில்  கட்சி சார்ந்த கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.