கோபி, மே 10- மதிப்பெண்கள் அடிப்படையில் தான் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்கிற நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சிகளுக்கு நைசால் கிருமி நாசினி, பிளீச்சிங்பவுடர், கையுறை மற்றும்முககவசம் ஆகியவற்றை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பட்டயக்கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு ஞாயிறன்று மதியம் 12 மணி முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ கத்தில் தான் பட்டயக் கணக்காளர் தேர் வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை அனைவரும் தேர்ச்சி அளித்து விடலாம் என்று முடிவு செய்யப் பட்ட போது அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. பத்தாம் வகுப்பு மதிப் பெண் அடிப்படையில் தான் உயர் கல்விக்கு அவர்கள் செல்ல முடியும். அத னால் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. மாணவர்களின் மன நிலையையும் அரசு பரிசீலனை செய்துகொண்டுள்ளது. தேர்வுகளை பொருத்தவரை தனிநபர் இடைவெளி களுடன் நடைபெறும் என்றும், தேர்வு எழு தும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது எனவும் அவர் தெரி வித்தார்.