இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்கிலாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார். இந்த சூழலில், போரிஸ் ஜான்சனுக்கு எதிராக லண்டனின், பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டத்தில், ”போரிஸ் ஜான்சன் எங்கள் பிரதமர் இல்லை. இனவாதத்துக்கு இங்கு இடமில்லை. அகதிகள் வரவேற்கப்படுவார்கள்” எனப் பதாகைகளில் எழுதி நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர்.