tamilnadu

img

பணி ஓய்வு பாராட்டு விழா

திண்டிவனம், மே 7-தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் விழுப்புரம் மண்டல துணைத் தலைவரும், சம்மேளனக்குழு உறுப்பினருமான ஓட்டுநர் டி. இராமதாஸின் பணி நிறைவு விழா திண்டிவனம் பணிமனை முன்பு நடைபெற்றது. டி. இராமதாஸின் பணி நிறைவு விழாவிற்கு திண்டிவனம் சிஐடியு சங்கத் தின் பணிமனை தலைவர் கே.அருள்சேகர் தலைமை தாங்கினார். பணிமனை பொருளாளர் எஸ்.காளிதாஸ் வரவேற்றார். சம் மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், துணைத் தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் துணைத் தலைவர் டி.ஏழுமலை ஆகியோர் டி.இராமதாஸின் தொழிற்சங்க பணிகளை நினைவுகூர்ந்து வாழ்த்தி பேசினர்.சிஐடியு விழுப்புரம் மண்டலத் தலைவர் ஆர்.மூர்த்தி, பொதுச் செயலாளர் எச்.ரகோத்தமன், சம்மேளன துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், சங்க பொருளாளர் கே.சுந்தரபாண்டியன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஏ.ஏழுமலை, பி.மணி, தொமுச மண்டல துணைத் தலைவர் டி.கே.கிருஷ்ணன், மறுமலர்ச்சி தொழிற்சங்க நிர்வாகி ஏ.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பல்வேறு தொழிற் சங் கங்களின் நிர்வாகிகளும், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகிகளும், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் மெட்ரோ தொழிற்சங்க நிர்வாகி சேகர் உள்ளிட்டோர் டி.இராமதாசுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். டி.இராமதாஸ் ஏற்புரை வழங்கினார். பணிமனை செயலாளர் ஏ.சங்கர் நன்றி தெரிவித்துப் பேசினார்.