ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற தோழர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் தீக்கதிர் நாளிதழுக்கு தங்களது பணிநிறைவு தொகையிலிருந்து நிதி வழங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் வி.மணியன் ரூ.1 லட்சம்; டி.பி.பழனிச்சாமி கட்சி நிதியாக ரூ.50 ஆயிரம் மற்றும் தீக்கதிர் நிதியாக ரூ.10 ஆயிரம்; ஆர்.ராஜூ முதல் தவணையாக ரூ.25 ஆயிரம்; ஜி.வெங்கடேசன் முதல் தவணையாக ரூ.5 ஆயிரம்; சிஐடியு மாவட்டச் செயலாளரான எச்.ஸ்ரீராம் ரூ.5 ஆயிரம் - என மொத்தம் கட்சி நிதியாக ரூ.1,95 லட்சம் வழங்கினார்கள். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன், மூத்த தலைவர்கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்று பேசினர். கட்சியின் வளர்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் அரங்கத்தின் பங்களிப்பு குறித்து பாராட்டிய அவர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்களின் உணர்வுமிக்க செயல்பாடுகளை பாராட்டினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி நினைவு பரிசு வழங்கினார்.