tamilnadu

சின்ன வெங்காயம் வரத்து குறைவு... விலை இருமடங்கு உயர்ந்தது

திண்டுக்கல்:
திண்டுக்கல் வெங்காய சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென தனி சந்தைகள் உள்ளன. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்குசின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்றுதினங்கள் சந்தை நடைபெறும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், திருப்பூர், தேனி, ஆரணி, பெரம்பலூர், திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கம்பம் ஆகியபகுதிகளில் இருந்து வருபவர்கள் சின்னவெங்காயத்தை கொள்முதல் செய்வார் கள். ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் சின்னவெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்றது. சமீபத்தில் பெய்துவரும் கனமழை மற்றும்ஊரடங்கு தளர்வால் உணவகங்கள் செயல் படத் தொடங்கியுள்ளன. நிகழ்ச்சிகளும் நடைபெற ஆரம்பித்துள்ளது. இதனால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. சென்ற வாரம் வெங்காய பேட்டைக்கு 300 டன் வந்தது. தற்போது பெய்துவரும் மழைகாரணமாக 100 டன் வெங்காயம் மட்டுமே வந்துள்ளது. இதனால் கிலோ ரூ.30க்கு விற்ற சின்ன வெங்யாகம் ரூ.60-க்கும், ரூ.15-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.28-க்கும்விற்கிறது.