திண்டுக்கல், செப்.12- உலக வேலையின்மை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை உருவாக்கக்கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பாக செப் டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை இரண்டு வார காலம் பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ள தாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். பாலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: மோட்டார் வாகன திருத்தச் சட்டம் தமிழகத்திலே அமல்படுத்தப்பட்டு தமி ழகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது. தமி ழகத்தில் வேறு எந்த சட்டமும் இது போன்று தீவிரமாக அமலாக்கியது இல்லை. பெண்கள் மீதான வன்முறை தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதை தடுப்பதற்கு தமிழக அரசு சட்டத்தை தீவிரப்படுத்தி கட்டுப் படுத்த முன்வரவில்லை. அது போல பல்வேறு சட்டங்கள் தமிழக அரசால் அமல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு வருகின்றன. அபராதத் தொகையை ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தியிருப்பது நியாயமில்லை. இதனைக் கண்டித்து செப்டம்பர் 18 ஆம் தேதி திண்டுக்கல்லில் வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.
தலை விரித்தாடும் வேலையின்மை
மோடி அரசின் 100 நாள் சாதனை என்று சொல்வது விட 100 நாள் துயரம் என்று தான் சொல்ல முடியும். மத்திய அரசு கடைப்பிடிக்கும் மோசமான தொழிற்கொள்கை காரணமாக ஏரா ளமான தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டு வருகின்றன. 87 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பார்லே நிறுவனம் மூடப்பட்டுள்ளது. மாருதி கார் நிறுவ னம் விடுமுறை அறிவித்துள்ளது. டி.வி.எஸ், டாடா மோட்டார் நிறுவனம் உள் ளிட்ட பல மோட்டார் வாகன நிறுவனங் கள் லே ஆப் செய்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக வேலையின்மை தலை விரித்தாடுகிறது. வெளிநாட்டு முதலீடு ரூ.8,800 கோடி வந்ததாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போவதாகவும் அறி வித்திருக்கிறார். ஆனால் கடந்த 2 ஆண் டுகளுக்கு முன்பாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினர். அதில் வெளிநாட்டு முதலீடு ரூ. 3 லட்சம் கோடி வந்ததாக சொன்னார்கள். பல புரிந்துணர்வு ஒப் பந்தம் போட்டதாக சொன்னார்கள். அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே ரூ.3 லட்சம் முதலீட்டில் எந்த அளவிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற புள்ளி விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத்த யாரா ?
லட்சக்கணக்கானோருக்கு வேலை எங்கே?
6500 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்து 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 6500 பேருக்குத்தான் வேலை கிடைக் கும். மீதமுள்ள லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுப்பது குறித்து முதலமைச்சர் பேசாதது ஏன்? தமிழ்நாட்டில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஏன் முன்வர மறுக்கி றது. ஒரு எம்எல்ஏ இறந்துவிட்டால் உட னடியாக அந்த எம்எல்ஏ பணியிடத்திற்கு இடைத்தேர்தல் நடத்தி உடனடியாக நிரப்புகிற ஏற்பாடு இந்திய அளவி லும், தமிழகத்திலும் உள்ளது. ஆனால் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தும் கூட அரசாங்கம் தொடர்ந்து நிரப்ப மறுக்கிறது. இதற்கெல்லாம் முத லமைச்சர் பதில் தர முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் ஆலை மூடலை தடுப்ப தற்கு அரசு முன்வரவேண்டும். செப்டம்பர் 15 ஆம் தேதி உலக வேலையின்மை எதிர்ப்பு தினமாகும். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண் டும். காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தயாராக வேண்டும் என்ற கோரிக்கை களை முன் வைத்து செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை 2 வார காலம் வேலை யின்மைக்கு எதிரான பிரச்சாரத்தை தமி ழகம் முழுவதும் நடத்தவுள்ளோம். இவ் வாறு அவர் கூறினார்.