சென்னை:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் நிலையில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்காக செப்டம்பர் 13 அன்று நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியமாணவர் சங்கம் சார்பில் வியாழனன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேனியில் மாநில துணைத் தலைவர் ம.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் நாகராஜ், மாவட்டத்தலைவர் பிரேம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தஞ்சாவூரில் அரவிந்த் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் அமுல்காஸ்ட்ரோ தலைமையிலும், கடலூரில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி தலைமையிலும் நடைபெற்றது. கோவையில்அசார் தலைமையில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செய லாளர் தினேஷ் ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் ஜனார்த்தனன் தலைமையிலும், செங்கல்பட்டில் தமிழ்பாரதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.