what-they-told

img

மாநிலம் முழுவதும் விரைவில் அம்மா ரோந்து வாகனம்

சென்னை, ஆக.26- பெண்கள் மற்றும் குழந்தை கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘அம்மா பேட்ரோல்’ எனப்படும் ரோந்து வாகனத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத் தார். தமிழகத்தில் பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க,  ஏடிஜிபி தலைமையில் தனிப்பிரிவு ஒன்று  அமைக்கப்பட்டது. இந்த பிரி வுக்கு மாவட்டந்தோறும் தனியாக  அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மக ளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள  பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே  விசாரிக்கும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் நம்பர் 1098, மற்றும் பெண்  களுக்கான ஹெல்ப்லைன் நம்பர்  1091 என வாகனத்தில் பதிக்கப்  பட்டுள்ளது. மொத்தம் ஏழு  கோடியே 50 லட்சம் மதிப்பீட்டி லான  40 வாகனங்களை முதல மைச்சர் காவல்துறை யிடம் ஒப்ப டைத்தார். முதற்கட்டமாக சென்  னையில், பெண்கள் குழந்தை களுக்கு எதிரான குற்றத்தடுப்புப்  பணியில் உள்ள 35 காவல் நிலை யங்களுக்கு இந்த ரோந்து வாக னங்கள் கொடுக்கப்படுகின்றன. விரைவில் தமிழகம் முழுவ தும், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத்  தடுக்கும் காவல் நிலையங்க ளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில், துணை முத லமைச்சர், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமைச்  செயலாளர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன், உள்  துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.