tamilnadu

கோபால்நாயக்கருக்கு அருங்காட்சியகம்... வாலிபர் சங்கம் கோரிக்கை

திண்டுக்கல்:
 சுதந்திரப் போராட்ட வீரா் கோபால்நாயக்கா் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு விருப்பாட்சியில் அருங்காட்சியகம்அமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலத் துணைச்செயலாளா் பாலச்சந்திரபோஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சி பகுதியை ஆட்சி செய்து வந்த கோபால் நாயக்கரின் 219-ஆவதுநினைவு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலைக்காக தமிழகத்தில் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரக்கு எதிராக தீபகற்பக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி பெரும்படைதிரட்டிப் போராடியவா் விருப்பாட்சி கோபால்நாயக் கர். அவரது நினைவை போற்றும் வகையில் விருப்பாச்சியில் மணிமண்டபம் அமைத்துள்ள தமிழக அரசு,அவர் பயன்படுத்திய பொருள்கள், ஆயுதங்கள் போன்றவற்றை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.அவா் குறித்த தகவல்களை கண்ணாடிப்பேழையில் வைத்து காட்சிபடுத்த வேண்டும். கோபால் நாயக்கா் வரலாறு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்திபரிசு வழங்கவேண்டுமென்றார்.