வத்தலகுண்டு, ஜூன் 3- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வத்தலகுண்டு மதுரை நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற் பட்ட காய்கறிகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வத்தலக்குண்டு காளி யம்மன் கோவில் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையும் தற்காலிகமாக சிபிஎஸ்ஐ பள்ளி வளாகத்திற்கு மாற்றம் செய்யபட்டு நடைபெற்று வந்தது. தற்போது தமிழக அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சில கோரிக்கைகள் மீது அந்தந்த மாவட்ட நிர்வாகமே தீர்வு காணலாம் என அரசு கூறி யுள்ளது. ஆனால் வத்தகுண்டில் காய்கறிக் கடை கள் செயல்பட அனுமதி அளிக்காததால் கடந்த வாரம் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழியிடம் வியாபாரி கள் மனு கொடுத்தனர். பின்னர் வத்தல குண்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை சந்தித்தும் வியாபா ரிகள் மனு கொடுத்தனர் இந்த நிலையில் காய்கறி கடைக்காரர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள பலசரக்கு மளிகை, கோழிக்கறி உட்பட பல்வேறு கடைகள் கடந்த இரண்டு நாட்களாக அடைக்கப்பட் டன. இதையடுத்து புதனன்று காவல்துறை ஆய்வாளர் வியாபாரிகள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். தனிமனித இடைவெளி விட்டு, முகக் கவசம் அணிய வேண்டும். மூங்கில் மரங்கள் மூலம் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு வியாபாரம் செய்ய வேண்டும். அரசு வழி காட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காத கடை கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் இன்று முதல் கடைகள் திறக்கப்படும் முடிவு செய்யப் பட்டது.