tamilnadu

img

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தில்லியில் வணிகர்கள் போராட்டம்

சென்னை:
ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து அகில இந்திய வணிகர்  சம்மேளனம் சார்பில் செவ்வாயன்று (டிச. 12) புதுதில்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புசார்பில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநிலப்பொரு ளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய சில்லறை வணிகம் முற்றிலும் அழிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டு,  வணிகம் அழிந்து வரும் இந்த சூழலில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற அன்னிய நிறுவனங்களின் மின்னணு முறை வணிகத்தினால் இந்திய சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.குறைந்தவிலை, மிகையான தள்ளுபடி (1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை) என்ற அடிப்படையில் ஆன்லைன் மூலம் பொருட்களைப் பொதுமக்கள் வாங்கினாலும், வாங்கப்படும் பொருட்கள் சில நிபந்தனைகளுடனும், உத்தரவாதமற்ற தாகவும் உள்ளது. அந்நிய நிறு வனங்கள் தற்போது முழுக்க முழுக்க இயந்திரங்களைக் கொண்டு ஆளில்லா வணிகத்தைத் தொடங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்து வணிகர்களின் வாழ்வாதாரம் வீழ்ந்துபோய்விடும். ஆன்லைன் வர்த்தகத்தால் நாடு முழுவதும் 25 கோடிப் பேரும், தமிழகத்தில் 37 லட்சம் பேர் நேரடியாகவும், 1 கோடிப் பேர்  மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். எனவேஆன்லைன் வணிகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தப்போராட்டம் நடைபெற்றது.

டிச.17ல் மாவட்டந்தோறும் போராட்டம் 
தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 17) அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும், ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.