திண்டுக்கல், மே 20- திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. ஆத் தூர் அணையில் ஒரு அடி அளவே தண்ணீர் உள்ளது. இன்னும் 15 நாட்களுக்கே தண்ணீர் விநியோகம் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். இது தொடர் பாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கத்தில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடை பெற்றது. வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, திண்டுக்கல் மாநக ராட்சிக்கு ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து 28 வார்டுகளுக்கும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து 20 வார்டுகளுக்கும் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் குறைந்த அளவு நீர் இருப்பதால் பொது மக்க ளுக்கு தேவையான அளவு நீர் ஆதா ரத்தினை ஏற்படுத்தி, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும், குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட் டால் அலுவலர்கள் மாவட்ட நிர்வா கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு பற்றாக்குறையின்றி குடிநீர் வழங்கிட தேவையான அளவு கூடுதலாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக 11 எம்.எல்.டி. குடிநீர் கொண்டு வருவ தற்கான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. கோடைகாலங்களில் ஊரகப் பகுதிகளில் முறையாக குடிநீர் விநி யோகம் செய்யப்படுவதை அலுவ லர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும்.
தற்போதைய குடிநீர் தேவையினை கருத்தில் கொண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகை யில் அந்தந்த பகுதியில் உள்ள நீர் ஆதா ரங்களை கொண்டு குடிநீர் வழங்கும் பணிகளை அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நட வடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அலு வலர்கள் கோடைகாலமான இத்தரு ணத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவை யினையும் கருத்தில் கொண்டு குடி நீர் விநியோகப் பணிகளில் எவ்வித தொய்வும் இல்லாமல் சீரான முறை யில் குடிநீர் விநியோகம் செய்யும் பணி களை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள் ளார்.
குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி திண்டுக்கல்
ஆத்தூர் அணையில் ஒரு அடிக்கு கீழ் தண்ணீர் சென்று விட்டதால் முழுக்க முழுக்க காவிரி கூட்டுக்குடி நீரை நம்பி இருக்க வேண்டி உள்ளது. அணை தண்ணீரை இன்னும் 15 நாட்க ளுக்கு மட்டுமே கொடுக்க முடியும். ஆத்தூரில் இருந்து 8 எம்.எல்.டி. கிடைக்கிறது. பிறகு மோட்டார் மூலம் பம்ப் செய்து தர வேண்டி உள்ளது. மேலும் கடந்த 4 நாட்களாக அண்ணா நகர் டேங்கில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் மின் விநியோகம் சரியாக இல்லாததே.
நெரூரிலிருந்து திண்டுக் கல் வரும் காவிரி குடிநீர் குழாய் பகுதி களில் 4 பூஸ்ட்டர்கள் உள்ளன. இந்த கோடை காலத்தில் ஏதாவது ஒரு பூஸ்ட ரில் தண்ணீர் ஏற்றப்பட்டு பம்பிங் செய்யும் போது கரண்ட் இல்லை என்றால் பம்ப் செய்ய இயலாமல் போய் விடும். தற்போது காவிரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் இருந்து 13 எம்எல்டி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலை மாறி தற்போது 5 எம்எல்டி தண்ணீர் தருவதற்கு குடிநீர் வடிகால் வாரியம் திணறுகிறது. தற்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளதால் ஓரளவு உறைக் கிணறு தண்ணீரைக் கொண்டு சமாளிக்க வாய்ப்புள்ளது.
வறட்சியில் தத்தளிக்கும் திண்டுக்கல் கிராமங்கள்
திண்டுக்கல் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. சிறுமலை, வெள்ளோடு, செட்டிநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, குரும்பபட்டி, பள்ள பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து. சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பெரியகோட்டை, முள்ளிப்பாடி, கோவிலூர், தாமர்பபாடி, பெரிய கோட்டை உள்ளிட்ட பல ஊராட்சி களில் ஆயிரம் அடிக்கு கீழ் தண்ணீர் சென்றுவிட்டது. ஆற்று பகுதிகளான அணைப்பட்டி, குறும்பட்டி பகுதி களில் ஓரளவு ஊற்று இருப்பதால் சப்பை தண்ணீர் கிடைக்கிறது.
பள்ள பட்டி, செட்டிநாயக்கன்பட்டி. சீலப் பாடி ஊராட்சிகளில் ஆத்தூர் மற்றும் காவிரி குடிநீர் கிடைக்கிறது. மற்ற ஊராட்சிகளில் தண்ணீர் இல்லை. சிறு மலையில் 100 அடியில் தண்ணீர் கிடைக்கும். தற்போது 300 அடிக்கு கீழ் தண்ணீர் சென்றுவிட்டது. அங்கும் குடிநீர் பிரச்சனை உள்ளது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி யில் உள்ள இந்திரா நகர், பத்மா நகர், மகாராஜா நகர் பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் தனியார் மூலம் விற்பனை செய்யப்படுவதாக கிராம சபை கூட்டங்களில் பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளிப்பட்டி, நந்த னார்புரம், ஆலக்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை.
இந்த ஊராட்சிகளில் 50 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. 500 அடியில் தண்ணீர் உள்ளது. பாலகிருஷ்ணாபுரம், முள்ளிப் பாடி, தாமரைப்பாடி, பெரிய கோட்டை, கோவிலூர், சீலப்பாடி ஊராட்சிகளில் வாரம் இரண்டு முறை தண்ணீர் கொடுக்கப்படுகிறது. 700 அடிக்கு கீழ் தண்ணீர் சென்று விட்டது. தோட்டனூத்து ஊராட்சியில் ரெண்டலப்பாறையில் 20 நாளுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படு கிறது. பள்ளபட்டி ஊராட்சியில் பூத மரத்துப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி யில் கள்ளிபட்டி, நந்தனார்புரம், காந்தி நகர் காலனி, ஆகிய பகுதிகளில் 15 நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் குடிநீர் விநியோகம்
திண்டுக்கல் மாநகராட்சியில் நில வும் குடிநீர் பிரச்சனை குறித்து சிபிஎம் நகரச் செயலாளர் பி.ஆசாத் கூறும் போது, காமராஜர் நீர்த்தேக்கத்தில் ஒரு அடி தான் தண்ணீர் உள்ளது. அதனால் மக்கள் காவிரிக் கூட்டுக்குடி நீரை நம்பி இருக்க வேண்டியதாகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அதி காரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு மணி நேரம் தான் தண்ணீர் விநியோகிக்கப் படுகிறது. ஒரு காம்பவுண்ட் வீட்டில் ஒரு குடும்பத்திற்கு 4 குடம் தண்ணீர் தான் கிடைக்கும். எனவே நகரில் ஆங்காங்கு பழுதான ஆழ்துளை கிணறுகளை போர்க்கால அடிப்படை யில் சரி செய்து உப்புத் தண்ணீர் தட்டுப் பாடினின்றி கிடைக்க வேண்டும். ஆள்துளை கிணறு மோட்டார்களை யும் சரி செய்து தர வேண்டும் என் றார்.
அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர்
கிராமப்புறங்களில் தலைவிரித்தா டும் குடிநீர் பிரச்சனையையொட்டி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அஜாய் கூறும் போது, நத்தம் சாலையில் விரி வாக்கப்பணி நடைபெறுகிறது. இத னையொட்டி அந்த குழாய்களை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். ஒன்றிய நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு குடிநீர் பிரச்சனையை தீர்கக வேண்டும். ஆத்தூர் அணையில் இருந்து பள்ளபட்டி ஊராட்சயில் உள்ள பிஸ்மி நகர், ஏ.பி. நகர், சின்னபள்ளபட்டி. குட்டியபட்டி, பூதமரத்துப்பட்டி, தோமையார்புரம் காலனி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை மீண்டும் வழங்க வேண்டும். பாலகிருஷ்ணபுரம் காமாட்சி நகர், அபிராமி நகர், மாலைப்பட்டி, மாலைப்பட்டி மேடு ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. வெள்ளோடு, கள்ளிபட்டி, நரசிங்க புரம் உள்ளிட்ட பகுதிகளி லும் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. ஓன்றியம் முழுவதும் இதே பிரச்சனை உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வா கமும், மாவட்ட நிர்வாகமும் காவிரி கூட்டுக்குடிநீர் தண்ணீரை முறைப் படுத்தி அனைத்து கிராமங்களுக்கும் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றார்.
இலமு, திண்டுக்கல்