tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கொரோனா கால நிவாரணம் ரூ.15 ஆயிரம் வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நலவாரிய அதிகாரிகளைச் சந்தித்து மனுக்கொடுத்து சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.முருகேசன், சிஐடியு மாவட்டத்தலைவர் பிரபாகரன், நிர்வாகிகள் தனசாமி, பெருமாள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.