tamilnadu

புகையிலைப் பொருட்கள் விற்ற இருவர் கைது

தருமபுரி, ஆக. 10- தருமபுரி அருகே சட்ட விரோதமாக புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி காவல் துறை யினர் ஞாயிறன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்துல் முஜீத் தெரு, கடைவீதி பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட தில், ஒரு கடையில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற் பனை செய்து வந்தது தெரி யவந்தது.

இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக அப்பாவு முதலி யார் தெருவைச் சேர்ந்த மணி (25), அப்துல் மஜீத் தெருவைச் சேர்ந்த நபீஷ் முகமது (42) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.