அவிநாசி, நவ. 29- அவிநாசி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வியாழனன்று பறிமுதல் செய்தனர். அவினாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள், பேக்கரி கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலி தாம்பிகை தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 4 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் 40 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டது. மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் கீழ் தடை செய்யப்பட்ட பொருட் களை வைத்திருந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.