tamilnadu

இழப்பீடு வழங்காததால் 2 அரசு பேருந்துகள் ஜப்தி

தருமபுரி, நவ.13- இருவேறு வழக்கு தீர்ப்புகளில் இழப்பீடு வழங்காத தால் அரசு போக்குவரத்துக் கழக இரு பேருந்துகளை நீதி மன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (34). கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஓசூர் செல்வதற்காக சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அப் போது சென்னை செல்லும் அரசு பேருந்து குமார் மீது  மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை கனக ராஜ், தருமபுரி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட குமாரின் குடும்பத் தாருக்கு ரூ.95 லட்சத்து 94 ஆயிரத்து 234 போக்கு வரத்துத்துறை சார்பில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் தற்போது வரை அரசு போக்குவரத்துத் துறை சார்பில் இழப்பீடு வழங்காததால், தருமபுரி பேருந்து நிலை யத்தில் நின்று கொண்டிருந்த சென்னை செல்ல கூடிய பேருந்தை நீதிமன்ற  ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதேபோன்று தருமபுரியை சேர்ந்த நதிம் அத்தர் (18).  இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தருமபுரி பேருந்து  நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப் போது அவர் மீது பெங்களூரு செல்லக்கூடிய அரசு பேருந்து  மோதியது. இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் அவரது தாயார் தாக்ரியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதில் தாக்ரியாவிற்கு ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 818- யை இழப்பீடு வழங்க போக்குவரத்துத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவருக்கும் இது வரை அரசு சார்பில் இழப்பீடு வழங்காததால் தருமபுரி  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெங்க ளூருவுக்கு சொல்லக்கூடிய அரசு பேருந்தையும் நீதிமன்ற  ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.