தருமபுரி, செப்.14- மார்க்சிய அறிஞர் தோழர் தேவ.பேரின்ப னின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சனி யன்று வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் பாப்பாரப்பட்டியில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், மார்க்சிய அறிஞ ருமான தோழர் தேவ. பேரின்பனின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத் தையொட்டி சனியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாப்பாரப்பட்டி பகுதிக் குழுவின் சார் பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வாலிபர் சங்கத்தின் பாப்பாரப்பட்டி பகுதிக் குழு தலைவர் எம்.சிலம்பரசன் தலைமை வகித் தார். துணை செயலாளர் எம்.வெங்கடேசன், எஸ்.கார்த்திக், பூவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொரு ளாளர் கே.முகிலன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை திராவிடர் கழக மாவட் டத் தலைவர் இ.மாதன் துவக்கி வைத் தார். இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ரத்த தானம் செய்தனர். முன்னதாக, தோழர் தேவ.பேரின் பன் திருவுருவ படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சோ.அருச்சு ணன், வி.விஸ்வநாதன், பகுதி செயலாளர் ஆர்.சின்னசாமி, வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் சீ.வேலாயுதம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க பாப்பாரப் பட்டி பகுதி செயலாளர் ஆர்.சக்திவேல், முறைசாரா தொழிலாளர் சங்கம் ஆர்.கே.பி.பெருமாள், சிஐடியு மாவட்டக் குழு உறுப் பினர் சி.சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் புலவர் இரா.வேட்ராயன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க பகுதி குழு உறுப்பினர் எம்.மணி கண்டன் நன்றி கூறினார்.