tamilnadu

img

தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிடுக தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 8- தலித்து மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்ட 3 வது மாநாடு தருமபுரி பூபதி மண்டபத்தில் சனியன்று ஏ.மாதேஸ்வரன், ஆர்.மல் லிகா ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சி.இராஜசேகரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதை யன், மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் அறிக்கை முன் வைத்து பேசினார். இம்மாநாட்டை தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலை வர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், சமூக ஆர்வலர் ஆர்.கே.கண்ணன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து, பிஎஸ்என்எல்இயூ மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன்,  திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் முருகன், எஸ்சிஎஸ்டி அலுவலர் சங்க மாவட்ட தலை வர்கள் கிருஷ்ணன், சாக்ரடீஸ், மனித உரிமைகள் கட்சி மாநில தலைவர் துரைராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

தீர்மானங்கள்
தருமபுரி மாவட்டத்தில் பஞ்சமர் நிலங்களை தலித் அல்லாதவர் களிடமிருந்து மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து கிரா மங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர், சுடுகாட்டு வசதி, சாலை வசதி, இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி கிராமத்தில் விவசாய நிலங்களை பாழ் படுத்தும் இந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். ராஜப்பேட்டை தலித் மக்களுக்கு சுடு காடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானமங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இதனையடுத்து, புதிய மாவட்ட தலைவராக டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் டி.மாதையன், பொருளாளராக கே.கோவிந்தசாமி, துணைத் தலை வர்களாக எம்.ராஜேந்திரன், வி.ரவி, பி.வி.மாது, டி.மாரியப்பன், பூபதி,என். செல்வராஜ், துணை செயலாளர்களாக ஜே.மகேந்திரன், வேலாயுதம், ரமேஷ், மா.தேவன், வழக்கறிஞர் சுரேஷ்,பி.ஜெயராமன் உள்ளிட்ட 37 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் மற்றும் கலைஞர்கள் சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சன்யா நிறைவுறை யாற்றினார். முடிவில் மாவட்ட பொரு ளாளர் கே.கோவிந்தசாமி நன்றி  கூறினார்.