சென்னை, ஆக. 21 - பாதாள சாக்கடை மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. முன்னணியின் மத்திய சென்னை மாவட்ட முதல் மாநாடு ஞாயிறன்று (ஆக.21) சிந்தாதிரிப்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், பாதாள சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் தனி யாரை அனுமதிக்க கூடாது, மலக்குழிக்குள் மனிதர்களை இறக்குவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வ தோடு, நிவாரணமும் வழங்க வேண்டும், தூய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும், குடிசை பகுதி மக்களுக்கு அதே இடத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டித்தர வேண்டும், அரசுப்பள்ளிகளை புனரமைத்து ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு, மாவட்டத் தலைவர் க.புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மெட்ரோ வாட்டர் சங்க பொதுச் செயலாளர் எம்.பழனி வரவேற்றார். முன்னணியின் துணைத் தலைவர் எம்.ஆர்.மதியழகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் வி.ஜானகிராமன் துவக்க வுரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செய லாளர் பி.சுந்தரமும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் எம்.சண்முகமும் சமர்ப்பித்தனர். முன்னணி யின் மாவட்டத் தலைவர்கள் எம்.பூபாலன் (வடசென்னை), ச.லெனின் (தென்சென்னை), டாஸ்மாக் சங்கத் தலை வர் ராமு ஆகியோர் வாழ்த்தி பேசினர். ‘பாதாள சாக்கடை மரணங்கள்’ குறித்து வழக்கறிஞர் செ.சரவணன் பேசினர். முன்ன ணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் நிறைவுரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் கே.குபேந்திரன் நன்றி கூறினார். தலைவராக ஜி.ஆனந்தன், செய லாளராக எம்.ஆர்.மதியழகன், பொரு ளாளராக வி.கோபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.