தருமபுரி, செப்.9- தருமபுரி கடத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், கடத்தூர் அருகேயுள்ள கேத்து ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவ ரின் மகள் நித்யா (13). இவர் அங்குள்ள அர சுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந் தார். இந்நிலையில், திங்களன்று காலை 7.30 மணியளவில், சிறுமி நித்யா தமது மிதிவண்டியில் அதே ஊரைச் சேர்ந்த செந்தில் மகன் சபரி (10) என்பவரை பின் னால் உட்கார வைத்துக் கொண்டு வேப்பி லைப்பட்டி-கேத்துரெட்டிப்பட்டி சாலை யில் சென்றுள்ளார். அப்போது, அந்த சாலையில் வந்த தனியார் கல்லூரி பேருந்து மிதிவண்டி மீது மோதியதில் சிறுமி நித்யா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற சிறுவன் சபரி காயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி நித்யா உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள், பொது மக்கள் தாளநத்தம்-பொம்மிடி சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். அப்போது தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலையை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி னர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி சார் ஆட்சியர் சிவன் அருள், அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் கிராம மக்களி டம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விபத்து குறித்து கடத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.