தருமபுரி, பிப்.13- குரூப்1 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளியன்று (பிப்.14) தரும புரியில் தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் உள்ள தன் னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தகுந்த பயிற்று நர்களைக் கொண்டு வெள்ளியன்று காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது.இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மேலும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். எனவே, தற்போது ஒருங்கிணைந்த குரூப் 1 தேர்வினை எழுதவுள்ள இளை ஞர்கள், இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.