தருமபுரி, ஜன.25- தருமபுரியில் சுகாதார குறியீடுகளை மேம்படுத்த தேசியநலக்குழும திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், மாநில அரசின் சிஆர்எம் என அழைக்கப்படும் சிறப்பு ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2019ஆம் ஆண்டிற்கான ஆய்வினை மேற்கொள்ள ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தேசிய நலக் குழும திட்ட இயக்குநர் கே.செந்தில் ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கே.செந்தில்ராஜ் பேசியதாவது, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை உள் ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் பொது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள 9 அரசு சமுதாய சுகாதார நிலையங்கள், 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 218 துணை சுகா தார நிலையங்கள், 1 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 9 நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் 16 பள்ளி சுகா தாரக் குழுக்கள் ஆகியவற்றை நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற் போது வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் மற்றும் பொது சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பு பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவை பொது மக்களுக்கு சரியாக உரிய நேரத்தில் சென்று சேருவது குறித்து நேரடி யாக கள ஆய்வு செய்தோம். இக்குழுவில் 25 மாநில சிறப்பு நிபுணர்கள் உள்ளனர். இப்பணிகளுக்காக சென்னையி லிருந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மருத்துவக் கல்வித் துறை மற்றும் மருத்துவம் (ம) ஊரக நலத் துறைகளைச் சேர்ந்த கூடுதல் இயக்கு நர்கள் துணை இயக்குநர்கள், சுகாதார நல அலுவலர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், ஆகியோர் அடங்கிய 11 சிறப்பு குழுக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய் தனர். அதன் விவரங்கள் குறித்த அறிக் கைகள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் வழங்கப்பட்டு வரும் சேவைகளை மேம்படுத்துவதற்காக தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்த விவரங்கள், அதை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள், பயிற்சிகள் ஆகியன குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது அனைவ ருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் சிறந்த சிகிச்சை வழங்குவது குறித்து விவாதிக்கப் பட்டது. மருத்துவர்கள் மருத்துவத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் சேவை மனப் பான்மையுடன் பணியாற்றிட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கினார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் சுகாதார குறியீடுகளை மேம்படுத்தவும், ஊட்டச் சத்து மற்றும் நலக்கல்வி தொடர்பான பணி களை ஒருங்கிணைந்து செய்யவும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனி வாசராஜ், இணை இயக்குநர் நலப்பணிகள் ஸ்டீபன்ராஜ், துணை இயக்குநர் சுகா தாரப்பணிகள் பூ.இரா.ஜெமினி, தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மருத்துவ அலுவ லர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.