தருமபுரி, மே 19-தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி உட்பட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெற்றது. இதில் 89.67 சதவிகித வாக்குபதிவானது.தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டிசட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஏப். 18 ஆம் தேதியன்றுதேர்தல் நடைபெற்றது. இதில்தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் டி.ஐய்யம்பட்டி, ஜாலிபுதூர், நத்தமேடு உள்ளிட்ட 10 வாக்குச்சாவடிகளில் பாமகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள வாக்கு அளித்ததாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தேர்தல்ஆணையத்திடம் புகார் அளித்தார்.இதனையடுத்து தேர்தல் ஆணையம் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட டி.ஐய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிபுதூர் ஆகிய 3 கிராமங்களில் உள்ள 8 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குபதிவு நடத்த உத்திரவிட்டது. அதன்படி மே 19 ஆம்தேதியன்றுன்று வாக்குபதிவு நடைபெற்றது.முன்னதாக, காலை 6 மணிக்குமாதிரி வாக்குபதிவு நடைபெற்றது. பின்னர் 7 மணிக்குவாக்குபதிவு தொடங்கியது. மக்கள் 6:30 மணி முதல் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். வாக்குச்சாவடி பகுதிகளில்காவல் ஆய்வாளர் தலைமையில்காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி வாக்குச்சாவடிகளுக்கு 200 மீட்டர் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அனைவரும் நடந்துசென்று வாக்களித்தனர். மேலும் 8 வாக்குச்சாவடிகளில் தலா 3 வெப் கேமராக்கள் வீதம்24 கேமராக்கள் பொறுத்தப்பட்டது. இதன்மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டது.இதேபோல், வாக்குசாவடி உள்ள கிராமங்களில் 9 சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 566 காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 24 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மறுவாக்குபதிவிற்காக 8 நுண்பார்வையாளர்கள், 50 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், தருமபுரி மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி, டிஐஜி செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.வாக்குப் பதிவின் இறுதியில்89.67 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதில் 8 வாக்குசாவடிகளில் மொத்தம் 6059 வாக்குகளுக்கு 5433 வாக்குகள் மட்டுமே பதிவானது.