tamilnadu

img

பென்னாகரம் அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த பழங்குடியின மக்களின் குடியிருப்பை சரி செய்ய கோரிக்கை

பென்னாகரம், மே 25-பென்னாகரம் அருகே மூலப் பெல்லூர் டேம் கொட்டாய் அருகில் உள்ள பழங்குடியின மக்களின்குடியிருப்புகள் சூறைக்காற்றால்முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனை உடனடியாக சரிசெய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மூல பெல்லூர் டேம்கொட்டாய் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதியில் ஆடு, மாடுகள், பழங்கள் மற்றும் மூலிகைகளை பிடுங்கி விற்று வாழ்வைநடத்தி வருகின்றனர். இவர்களுக்காக அப்பகுதியில் வருவாய் துறையின் சார்பில் சீமெண்ட் சீட்டுகள்அமைத்தவீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த வியாழனன்று இப்பகுதியில் வீசப்பட்ட பலத்த சூறைக்காற்று காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து வருவாய் துறை அலுவலர்களிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல், காற்றின் காரணமாக மின் கம்பங்கள் உடைந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வனவிலங்குகளின் தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குடியிருப்புகளை சரி செய்து மின்சாரத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.பி.முருகன் கூறுகையில், பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும், இருளர் இன மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் அவர்கள் வெறும்சிமெண்ட் சீட்டுபோட்ட குடியிருப்புகயே அமைத்துக் கொடுத்துள்ளனர். இதேபோல் அவர்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும்வைத்தோம். அதன் அடிப்படையில் தற்போது அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த பட்டாவிற்கு உரிய இடத்தை அரசாங்கம் அவர்களுக்கு காட்ட மறுத்து வருகிறது.இது போன்ற இயற்கைப் பேரிடர் சூழல்களில்  பழங்குடியினமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை அவர்களுக்கு முறையாக வழங்க வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை முழுமையாக அரசு ஏற்று அவர்களுக்கு விரைவில் சேதமடைந்த வீடுகளை சரி செய்யவும் மின்சார இணைப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.(ந.நி)