tamilnadu

img

தலித் இளைஞர், பெண் படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப். 22-  தலித் இளைஞர் மற்றும் தலித் பெண் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சனியன்று தரும புரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்ட காரை கிரா மத்தில் சாதிய வன்கொடுமையால் தலித் இளைஞர் சக்திவேல் என்பவர்  படுகொலை செய்யப்பட்டார். அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டி, நெல்லூர்  கிராமத்தை சேர்ந்த தலித் பெண்  சசிகலா என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்விரு படு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட வர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய  வேண்டும். படுகொலை செய்யப் பட்ட சக்திவேல் மற்றும் சசிகலா குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் சனியன்று தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எஸ்.ராமச் சந்திரன் தலைமை வகித்தார். மாநில  துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில செயலாளர் வழக்கறிஞர் டி. மாதையன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எழில் அரசு, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் மற்றும் கலை ஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப் பினர் நாகைபாலு, மனித உரிமை  கட்சி மாநிலத் தலைவர் துரைராஜ், பன்னியாண்டிகள் சங்க மாவட்டத் தலைவர் சம்பத் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கே. கோவிந்தசாமி, எம்.தேவன் உள் ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.