districts

img

பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்கள் அராஜகத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 19 - மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி பழைய பேருந்து  நிலையம் அருகே தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நபிகள் நாயகத்தை இழி வாக பேசிய பாஜக செய்தி  தொடர்பாளர்களை கைது செய்யக் கோரியும், குடியுரி மைக்காக பேசிய மாணவி அஃப்ரின் பாத்திமா வீட்டை இடித்து கலவரத்தை நடத்தி வரும் பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல்களின் அராஜகத்தை கண்டித்தும், சிறுபான்மை மக்களை பாதுகாத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், பொருளாளர் ஏ.ஆர்.விஜய்,  விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் சார்பில் ஒன்றியச் செயலாளர் அசோகன், டி.ஜி. ரவி, சிஐடியு மாவட்டத் தலை வர் சீனி.மணி, வ.பழனி வேலு, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் முசாருதீன், விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் நகர செயலாளர் தமிழ் இனியன், மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ், பெரி யார் திராவிட கழக மாவட்டச்  செயலாளர் பெரியார் செல்வம், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் குண சேகரன், மக்கள் அதிகாரம் சுப்பு மற்றும் கடவாசல், வட கால் ஜமாத்தார்கள் கண்டன  உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும்  மேற்பட்டோர் போராட்டத் தில் கலந்து கொண்டனர்.