செங்கல்பட்டு, பிப். 7- குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில் கடந்த மூன்று தலைமுறையாக பின்தங்கிய வகுப்பான வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த எம். வேனுகோபால் மகன் நந்தகுமார் கூவத்தூரில் சலவை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரையும், குடும்பத்தை சார்ந்தவர்களையும், குலத்தொழிலை செய்யாமல் ஏன்? வேறு இடத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்கள் என்று சாதிய ஆதிக்க சக்திகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், கோயில்க ளில் உள்ளேயும் அனுமதிப்ப தில்லை. சாதிய ரீதியாகவும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளனர். கடந்த ஜனவரி 24 அன்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய நந்தகுமார், குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஆதிக்க சாதியினர் நந்தகுமாரின் வீட்டிற்கு தீவைத்துள்ளனர். இதனை யடுத்து, அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் நந்த குமாரும் குடும்பமும் உயிர் தப்பி யுள்ளது. இதனைத் தொடர்ந்து, நந்த குமார் தன்னுடைய குடும்பத்தின ருடன் கூவத்தூர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு தீ வைத்து கொலை மிரட்டல் விட்டு வாழ்வாரத்தை அழிப்பதுடன் நந்தகுமார் குடும்பத்தை ஊர் வேலைக்கு கட்டாயப்படுத்தும் நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப் பட்ட குடும்பம் அச்சமின்றி சுயமரி யாதையுடன் வாழ்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப். 7) மாவட்டப் பொருளாளரும் சமூக பண்பாட்டு பணியாளர் குடி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளருமான எ.ராம லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல் பட்டு மாவட்டச் செய லாளர் ப.சு.பாரதி அண்ணா, முன்னணியின் மாவட்டத் தலைவர் இ.சங்கர், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், சமுக பண்பாட்டு பணியாளர் போராட்டக்குழு நிர்வாகி பெருமாள் குமாரசாமி, தமிழ்நாடு வண்ணார் பேரவை நிர்வாகி மணிபாபா, வண்ணார் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகி சீரங்கன், சாமன்ய மக்கள் நீதிக்கட்சி நிர்வாகி பாலமுருகன், தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்கம் நிர்வாகி பாலன், சலவை தொழிலாளர் பேரவை நிர்வாகி பாலு, புதிரை வண்ணார் சங்கத்தின் நிர்வாகி ஜீவானந்தம், பாதிக்கப்பட்ட நந்தகுமார் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மதுராந்தகம் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.