tamilnadu

img

தருமபுரி மற்றும் சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தருமபுரி, செப்.12- தருமபுரியில்நக ராட்சி அதிகாரிகள் கடை களில் நடத்திய திடீர் சோத னையில் தடை செய்யப் பட்ட 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  தருமபுரி நகரில் பல் வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் மற்றும் பாலி தீன் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலை மையில், சுகாதார பிரிவு அதிகாரிகள் புத னன்று பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை  மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது 21 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1,250 கிலோ  பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர் பாக அந்த கடைகளின் உரிமையாளர் களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.  இதைத்தொடர்ந்து நகராட்சி அதி காரி, தருமபுரி நகரில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் வணிக நிறுவனங் களில் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை சேர்ந்தவர்கள் குப்பைகள் தெருவில் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த திருமண மண்டப நிர்வாகிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மதிக்காமல் சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பை கள், உணவு கழிவுகளை பொது இடங் களில் கொட்டும் திருமண மண்டபங்கள், வணிகநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்தார்.
சேலம்
இதேபோல், சேலம் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம்  வரை 4032 கடைகளில் 48 ஆயிரம் கிலோ  அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதில் ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 170 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் மாநகராட்சி பகுதி களில் அனைத்து கடைகள் மற்றும் வணிக  நிறுவனங்களிலும் தடை செய்யப்பட் டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்துவதையும், விற்பனை செய்வதை  தடுக்கவும் தொடர்ந்து கண்காணிக்கப் படுவதாக சேலம் மாநகராட்சி ஆணை யாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.