பென்னாகரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட மூத்த தோழர் எம்.ஆறுமுகம் நினை வகத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மூத்தத் தோழர் எம்.ஆறுமுகத்தின் நினைவிடம் திறப்பு விழாதிங்களன்று ஒகேனக்கல் சாலையில்உள்ள மடம் கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளம்பரிதி தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மறைந்த தோழர் எம்.ஆறுமுகம் அவர்களின் நினைவிடத்தை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து செங்கொடியை ஏற்றி வைத்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கல்வெட்டை கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கொடியினை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் ஏற்றிவைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதன், மாரிமுத்து, சிசுபாலன், நாகராசன், மல்லையன், ராமச்சந்திரன், அர்ஜுனன், கிரேசாமேரி, இடைக்குழு செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் ஜோதி ஆறுமுகம், ஆ.ஜீவானந்தன், ஆ.பூபேஷ் உள்ளிட்டதோழர் ஆறுமுகம் அவர்களின் குடும்பத்தார் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.