தருமபுரி, அக்.16- மோடி அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள் கைகளைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு, இளைஞர் களுக்கு வேலையில்லா காலத் திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய மாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். வேலையிழந்த தொழி லாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை நடத்த ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற் சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர்இந்தியாவை தனி யாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தின் கீழ் வேலைநாட்களை 200 நாட்களாக உயர்த்தி, நாள் ஒன்றுக்கு ரூ.400 கூலி வழங்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், கம்பை நல்லூரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஐ மாநில குழு உறுப்பினர் ஏ.மாது தலைமை தாங்கினார். சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் கே.தங்கராசு, மாவட்ட குழு உறுப்பினர் சி. வேலாயுதம், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் கா.சி.தமிழ் குமரன் ஆகியோர் பேசினர். காரிமங்கலத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.தேவ ராஜன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.முத்து, டி.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இண்டூரில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோலை.அருச்சுணன், கே.என்.மல்லையன், ஒன்றிய செயலாளர் பி.டி.அப்புனு, சிபிஐ சார்பில் மாநில குழு உறுப்பினர் எம்.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரூரில் சிபிஎம் ஒன்றியச்செய லாளர் ஆர்.மல்லிகா தலைமை வகித்தார் மாவட்டச்செய லாளர் ஏ.குமார், சிபிஐ ஒன்றியச் செயலாளர் அல்லிமுத்து ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பாலக்கோட்டில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் ஜி.நக்கீரன் தலைமை வகித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். பாப்பாரப்பட்டி பகுதி குழு சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அர்ஜுனன், பகுதி செயலாளர் ஆர்.சின்ன சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சின்னசாமி உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்ட செய லாளர் கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராஜாமணி, லோகநாதன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை வட்டம் பாவக்கல்லில் முத்துகுமார் தலை மையில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி, பகுதிச்செய லாளர் கே.எம்.எத்திராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம், ஓமலூர் அண்ணாசிலை அருகில் நடை பெற்ற இடதுசாரிகள் பிரச்சார இயக்கத்தில் சிபிஎம் வட்ட செய லாளர் பி.அரியா கவுண்டர், சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.மதி யழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கணபதி, சிபிஐ மாவட்ட நிர் வாகக் குழு உறுப்பினர் கே.ரங்க நாதன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.