மதுரை:
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி தவித்த மக்களுக்கு குடும்பத் திற்கு மாதம் 7,500 வீதம் ஆறு மாத காலத்திற்குநிவாரணம் வழங்க வேண்டும். பாஜக அரசுதமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். 100 நாள் வேலையை இரு நூறுநாட்களாக அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா. லெனின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா. தெய்வராஜ், மா. கணேசன், அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், எம். பாலசுப்பிரமணியம், வை.ஸ்டாலின், ஆர்.சசிகலா, மற்றும் கு.கணேசன், பி.ஜீவா, டி.குமரவேல், கா. இளங்கோவன், ஜெ.லெனின், எம்.நந்தாசிங், ராஜலெட் சுமி, எம்.எஸ். முருகன், இரா. முருகன், மாநிலக்குழு உறுப்பினர் சேது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மதுரை புறநகர்
மதுரை சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் ஒன்றியச் செயலாளர் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், சிபிஐ (எம்-எல்) மாவட்டச் செயலாளர் மதிவாணன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருப்பரங்குன்றத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளர் முத்துவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.திருமங்கலத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஒ.சுப்புக்காளை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜி.முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலூரில் சிபிஐ தாலுகா செயலாளர் க.மெய்யர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கிழக்கு தாலுகாகுழு சார்பில் யா.ஒத்தக் கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், சிபிஐ ஒன்றியச் செயலாளர்பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.செல்லம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டடச் செயற்குழு உறுப்பினர் கே.அரவிந்தன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஏ.எம்.ஜெயக்கொடி, ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.ராமர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எழுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முத்துராணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், செல்லவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தே.கல்லுபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் மணிக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் வி.சமையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அலங்காநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம்தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பி.சேதுராமன், கண்ணன், சிபிஐ (எம்எல்) ஒன்றியச் செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தனபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சொ.பாண்டியன், தாலுகா செயலாளர் சேதுராமு, சிபிஐ சார்பில் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஐ நகர் செயலாளர் காதர்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, சிபிஐ நிர்வாகிகள் எஸ்.சீனிவாசன், சக்கணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருச்சுழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.அன்புச் செல்வன், நீதிராஜன் ஆகியோர் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன், காரியாபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் ஏ.அம்மாசி தலைமையில் சிபிஐ நகர் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் கே.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட நிர்வாகி எஸ்.பழனிக்குமார், எஸ்.எஸ்.முத்து, சீனிவாசன், ஜீவா உள்ளிட்டோரும் ஏழாயிரம்பண்ணையில் கிருஷ்ணமூர்த்தி. யோகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒனறியச் செயலாளர் எஸ்.சரோஜா, எம்.சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் கே.முருகன், சிபிஐநகர் செயலாளர் இக்பால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன், ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், சிபிஐ சார்பில் க.சமுத்திரம், ஜீவா ஆகியோரும் ஆர்.ஆர்.நகரில் சிபிஐ ஒன்றிய செயலாளர் வி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு, எம்.சி.பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.திருவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் ஜெயக்குமார்,சிபிஐ நகர் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், சிபிஐ சார்பில் அழகிரிசாமி வேதநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் மாரியப்பன், ரவி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன் சிபிஐ விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம் ஆகியோரும் வத்திராயிருப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், சிபிஐ கோவிந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி சிபிஐ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி
தேனி தாலுகாவில் அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, என்.ஆர்.டி நகர், பள்ளிவாசல், பி.சி.பட்டி, அரண்மனைப்புதூர் ஆகிய இடங்களில் இடதுசாரிக் கட்சிகளின்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் மார்க்சிஸ்�