கோவை, பிப். 20 - மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கோவையில் சிபிஎம், சிபிஐ கட்சியினர் வியாழனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். மத்திய மோடி அரசு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இன்சூ ரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக் கையை எடுத்துள்ளது. இதே போல் அதிகரித்து வரும் வேலை யின்மை, விவசாய நெருக்கடி, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை யோசிக்காமல் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிகளை வெட்டியும், கார்ப்ரேட்டுகளுக்கு மேலும் மேலும் சலுகைகளை வழங்கும் பட்ஜெட்டை சமர்ப்பித் துள்ளது. இதேபோல் தமிழக அரசு மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை பெருவதற்கு திராணியற்றும், மக்கள் நலத்திட் டங்களுக்கான நிதியை வெட்டி யும், தமிழகத்தையே கடனில் சிக்கிய மாநிலமாக தள்ளியுள்ளது. இந்த மத்திய, மாநில மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சி களின் சார்பில் கூட்டு இயக்கங் களை நடத்த அறைகூவல் விடுக் கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை சிவானந்த காலனி அருகே சிபிஎம், சிபிஐ கட்சியினர் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கருப்பையா, என்.ஜெய பாலன், கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.பெரு மாள், ஆர்.வேலுசாமி, அஐய் குமார், கே.எஸ்.கனகராஜ் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், நிர்வாகிகள் சிவசாமி, ஆர்.தேவ ராஜ், தங்கவேல், ஆர்.ஏ.கோவிந்த ராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் இடது சாரி கட்சிகளை சார்ந்த ஏராள மானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.