tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப். 17- குறைந்த பட்ச ஓய்வூதியம் கேட்டு தமிழ்நாடு சத்து ணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திங்களன்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பி. நாகராஜன் தலைமை வகித்தார். இதில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செ ழியன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத்த லைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் சவுந்தர ராஜன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு மற்றும் அங் கன்வாடி திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் களுக்கு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.7,850, வழங்க வேண்டும். அகவிலைப்படி குடும்ப ஓய்வூதி யம், மருத்துவபடி, இலவச பஸ்பாஸ் , குடும்பநல நிதி ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.