கேரளா பள்ளி மாணவர்கள் அசத்தல்
குன்னம்குளம், நவ. 5- கண்ணிமைக்கும் நேரத்தில் பிஞ்சுக் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த ரோபோ, ஆழ்துளைக்குள் குனிந்து பார்க்கிறது. நிமிடங்களில் குழந்தையை மீட்டு மேலே கொண்டு வருகிறது.
கேரள மாநில அளவிலான மாணவர்களின் அறிவியல் திருவிழாவில்தான் இப்படி ஒரு காட்சி. கேரள மாநிலம் ஆலுவா நகரில் உள்ள வாழக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சூர்யா ஜோசும் பத்தாம் வகுப்பில் படிக்கும் சிவதேவ் மனுவும் ஆழ்குழாய் மீட்பு ரோபோவுடன் வந்து இந்த காட்சியை படைத்தனர். பெரும்பிலாவு டிஎம்வி உயர்நிலைப் பள்ளியில் இந்த நடந்த இந்த காட்சியை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.கேரள மாநில அளவிலான மாணவர்களின் அறிவியல் திருவிழாவில்தான் இப்படி ஒரு காட்சி. கேரள மாநிலம் ஆலுவா நகரில் உள்ள வாழக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சூர்யா ஜோசும் பத்தாம் வகுப்பில் படிக்கும் சிவதேவ் மனுவும் ஆழ்குழாய் மீட்பு ரோபோவுடன் வந்து இந்த காட்சியை படைத்தனர். பெரும்பிலாவு டிஎம்வி உயர்நிலைப் பள்ளியில் இந்த நடந்த இந்த காட்சியை பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர்.
பிவிசி குழாய், ஆழ்துளை கிணறாக மாற்றப்பட்டது. ஒரு பொம்மையை கிணற்றுக்குள் போட்டனர். கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட பொம்மையை காப்பாற்றும் பணியில் ரோபோவை சூர்யா ஜோசப்பும் சிவதேவ் மனுவும் ஈடுபடுத்தினர். மைக்கும், ஒலிபெருக்கியும், கேமராவும், விளக்கும், ஆக்சிஜனும் தயாராக இருந்தது. கிணற்றில் குதித்த ரோபோ பாதுகாப்பாக பொம்மையை சுற்றிப் பிடித்து வெளியே கொண்டுவந்தது. வெளியில் நின்றவர்களால் கணினி திரையில் ரோபோவின் முழு அசைவையும், கிணற்றின் உட்பகுதியையும் காண முடிந்தது. ரோபோவின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஐந்து சக்கரங்கள், வாம் கியர், ஆக்சிஜன் செலுத்தி, பிசிபி, ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி, மைக், கணினி திரை ஆகியவற்றை பயன்படுத்தி இந்த மாதிரி ரோபோவை தயாரித்துள்ளனர். இதற்கான செலவு ரூ.5ஆயிரம் மட்டுமே. உண்மையான ரோபோ தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிஞ்சு குழந்தை உயிரிழந்த துயரமே இந்த கண்டுபிடிப்புக்கு தூண்டுதலாக அமைந்தது என மாணவர்கள் இருவரும் தெரிவித்தனர்.