சென்னை,செப்.14- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,672-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான முதலீடு அதிக ரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் ஆகி யவை காரணமாக ஆபரண தங்கத்தின் விலை கடந்த 1 மாதத்துக்கு மேல் உயர்ந்த வண்ணமாய் இருந்தது. கடந்த 4ஆம் தேதி காலை தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.
இது சாதாரண மற்றும் ஏழை மக்களை கவலையில் ஆழ்த்தியது. அன்று மாலையே ரூ.30 ஆயிரத்தில் இருந்து கீழ் இறங்கி ரூ.29,928-க்கு வந்தது. கடந்த 6ஆம் தேதி தங்கம் விலை பவு னுக்கு அதிரடியாக ரூ.664 குறைந்தது. மறு நாள் ரூ.104 உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் அதே நிலையில் நீடித்தது.கடந்த 9ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக சரிய தொடங்கியது. இதனால் ரூ.29 ஆயிரத்துக்கு கீழே இறங்கி யது. சனிக்கிழமையும் (செப்.14) தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.3,584-க்கு விற்பனையானது. பவுன் ரூ.224 குறைந்து ரூ.28,672 ஆக இருந்தது.கடந்த 10 தினங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1498 சரிந்து உள்ளது. இதே போல வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்துள்ளது. ஒரு கிராம் ரூ.48.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.48,700 ஆகவும் உள்ளது.