tamilnadu

img

தங்கம் விலை சவரனுக்கு 624 ரூபாய் குறைந்தது

சென்னை,பிப்.29- தங்கம் விலை சவரனுக்கு  624 ரூபாய் குறைந்தது ரூ.31  ஆயிரத்து 888-க்கு விற்பனை யானது. தங்கம் விலை கடந்த ஆண்டு முதல் மிக அதிக அளவில் அதிகரிப்பதும், பிறகு சிறிது குறைவதுமாக உள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிக ரான ரூபாய் மதிப்பு மற்றும்  கச்சா எண்ணெய் விலையில்  ஏற்படும் மாற்றங்கள், தங்கம்  மீதான முதலீடுகள் ஆகி யவை தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வ தாக இருந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்தது. இது தங்கம் விலையில் வர லாறு காணாத உயர்வை ஏற்படுத்தியது. கடந்த 18 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை மிக அதிகமாக உய ரத் தொடங்கியது. ஒரு சவரன்  தங்கத்தின் விலை ரூ.33 ஆயிரமாக இருந்தது. 

கடந்த வார இறுதியில் தங்கம் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந் தது. கடந்த 24 ஆம் தேதி  752 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.33 ஆயிரத்து 328 ஆக உயர்ந்து மக்களை மிரட்டியது. தங்கம் விலை 33 ஆயிரத்தை கடந்ததால் ஏழை-எளிய மக்கள் பீதிக்குள்ளானார்கள். கடந்த 4 நாட்களாக ஓரளவு குறைந்து வருகிறது. ஏறிய வேகத்தில் தங்கம் விலை குறைந்ததால் 32 ஆயிரம் ரூபாய்க்கு வந்தது. சனிக்கிழமை (பிப்.29) தங்கம் விலை சவரனுக்கு 624 ரூபாய் குறைந்து ரூ.31 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,440 அளவுக்கு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டது. வெள்ளி ஒரு  கிராம் ரூ.1.60 குறைந்து  ரூ.47.40-க்கு விற்பனை யானது.