tamilnadu

img

தள்ளுபடியோ, தள்ளி வைப்போ இவர்களுக்கு தேவையா? - க.கனகராஜ்

சில பெரும் பணக்காரர்கள் தாங்கள் வாங்கிய கடனைக் கட்டுவதில் சிரமம் இருந்ததா கவும், அதனால் அவர்களின் கடன்களை தள்ளுபடி அல்லது சங்பரிவார் சொல்வது போல ‘தள்ளி வைப்பு’ செய்திருப்பதாகவும் செய்தி கள் வந்ததையொட்டி விவாதங்களும், எதிர் வாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

சமீப காலமாக இந்தியாவும், உலகமும் பொருளாதார நெருக்கடியை ஏன் வீழ்ச்சி யையே கூட சந்தித்துக் கொண்டிருக்கின் றன. பெரும்பகுதி மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது, சேமிப்பு குறைந் திருக்கிறது, உணவு உட்கொள்ளும் அளவு குறைந்திருக்கிறது. தேவைக ளுக்கான பொருட்கள் வாங்குவதும், இரு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதும் குறைந்திருக்கிறது. இது ஒரு உண்மை. ஆனால், இன்னொரு உண்மையும் இருக்கிறது.

இந்தக் காலத்தில் இந்தியாவில் பெரு முதலாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு 1,82,000 பேராக இருந்த  டாலர் மில்லியனர்கள், 2019ம் ஆண்டில் 7,59,000 பேராக உயர்ந்திருக்கிறார்கள்.

கீழே உள்ள அட்டவணையின் படி 2014ம் ஆண்டில் இந்தியாவில் உயர் நிலையிலுள்ள 1% பெரும் பணக்காரர்க ளின் சொத்து மதிப்பு, கீழ்நிலையிலுள்ள இந்தியர்களின் 49% பேரின் சொத்துக்கு இணையாக இருந்தது. இதுவே 2019ல் 1% பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 70% இந்திய மக்களின், அதாவது ஏறத்தாழ 90 கோடி மக்களின் சொத்து மதிப்பைப் போல 4 மடங்கு அதிகமாக பெருத்திருக்கிறது, வீங்கியிருக்கிறது.

2017ம் ஆண்டில் இந்த 1% பேரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.20,91,300 கோடி அதிகரித்திருக்கிறது, அதாவது உயர்வு மட்டும். இந்தத் தொகை மத்திய அரசின் 2017-18 ஆம் ஆண்டின் பட்ஜெட்டிற்கு இணையானது. இதேபோல, இந்தியாவில் 2018ம் ஆண்டு 63 உயர் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 2018-19 ஆம் ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட் தொகை யான ரூ.24,42,200 கோடியை விட அதிகமாகும்.

இப்படி ஊதியிருக்கிற பெரு முதலாளி களுக்கு ரூ.68,000 கோடி தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா?

அதற்காக ஏழை எளிய மக்களின் ரேசனில் கைவைக்க வேண்டுமா?

தொழிலாளர்களின் வேலைநேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வேண்டுமா?

அரசு ஊழியர்களின் சம்பளத்தை வெட்டிச் சுருக்க வேண்டுமா?

இதுதான் கேள்வி...

இந்த விபரங்களே போதும், இந்திய அரசு பெரு முதலாளிகளின் அரசு, ஏழைக ளிடம் அடித்துப் பிடுங்கி பெரும் கார்ப்பரேட்டு களின் கஜானாவில் தந்தணித்து சமர்ப்பிக்கிற அரசு என்பதை விளக்க...

நிலைமை இப்படி இருக்க தள்ளுபடி யோ, தள்ளி வைப்போ இவர்களுக்கு தேவையா?