tamilnadu

img

பெசோஸ், ஜேக் மாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி!

ஒரே ஆண்டில் 1.20 லட்சம் கோடி சொத்து அதிகரிப்பு

மும்பை, டிச.25- 2019-ஆம் ஆண்டில் அதிக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில், இந்தியா வின் முதற்பெரும் பணக்காரரும்- ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித் துள்ளார். முகேஷ் அம்பானி 2019ஆம் ஆண்டில் (டிசம்பர் 23 வரை) மட்டும் மொத்தம் 17 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 971 கோடியே 15 லட்சம் ஆகும். இந்த வகையில், முகேஷ் அம்பானி, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், சீனா வைச் சேர்ந்த ‘அலிபாபா’ குழும நிறுவனர் ஜாக் மா உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலகின் மிகப் பெரும் பணக்காரர் களில் ஒருவரான ஜெப் பெசோஸ் (அமே சான் தலைவர்) இந்த ஆண்டில் 13.2 பில்லி யன் டாலரை இழந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த ‘அலிபாபா’ நிறுவனர் ஜாக் மா,  2019ஆம் ஆண்டில் 11.3 பில்லியன் டால ரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள் ளார்.

ஆனால், முகேஷ் அம்பானி 17 பில்லி யன் டாலர் அளவிற்கு சொத்து மதிப்பை  அதிகரித்துள்ளார். இதன்மூலம் ஒட்டு மொத்தமாக, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 4 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயாக (61 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவ னத்தில், 42 சதவிகித பங்குகள் முகேஷ் அம்பானி வசம் உள்ளது. 2016-ஆம் ஆண்டு இறுதியில், ஜியோ திட்டத்திற்கு பிறகு, ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, அம் பானியின் சொத்து மதிப்பு அதிகரித்த தற்கு முக்கிய காரணமாகக் கூறப்படு கிறது. ஜியோவில் மட்டும் 50 பில்லியன் டால ருக்கு மேல் அம்பானி முதலீடு செய்துள் ளார். அம்பானி செய்துள்ள முதலீட்டில் பெரும்பாலானவை கடனாகப் பெற்றவை யாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் கள் முழுவதையும் 2021ஆம் ஆண்டுக் குள் முடித்து விடுவதாக அம்பானி தெரி வித்துள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி. சென்ற ஆண்டில் 14- ஆவது இடத்திலிருந்து 2019-ஆம் ஆண்டில் 12-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதிலும் முகேஷ் அம்பானியின் புதிய வணி கங்கள், அடுத்த சில ஆண்டுகளில் ரிலை யன்ஸ் வருவாயில் 50 சதவிகித பங்க ளிப்பை வழங்கக்கூடும் என்றும் கருதப் படுகிறது. அது தற்போது 32 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.