tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 இன்றைய ஆட்டம்

நியூஸிலாந்து - பாகிஸ்தான்

இடம் : பிர்மிங்ஹாம்  
நேரம் : பிற்பகல் 3 மணி

வெற்றி 50% :  50% வாய்ப்பு

இரு அணிகளும் சமபலத்தில் உள்ளது. இதனால் வெற்றி, தோல்வி பற்றி உறுதியாகக் கருத்து கூற முடியாது. இருப்பினும் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடையுடன் வலம் வருவதால், பாகிஸ்தான் அணியை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்குக் குடைச்சல் ஏற்படும். குறிப்பாக இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் தான்.

மழை 30%  வாய்ப்பு 

பிர்மிங்ஹாம் நகரில் வெயில் அடித்தாலும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று வீசினால் பிற்பகல் 3 மணிக்கு (இங்கிலாந்து காலநிலைப்படி) மேல் சாரல் மழை பெய்யும்.

ஆடுகளம் எப்படி?
வேகம், சுழல் இரண்டும் சரிசமமாக எடுபடும். பவுன்சர்  நன்றாக எகிறும் என்றாலும், ஸ்்விங் வகை பந்துவீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருநாள், டி-20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிக்குத் தான் இந்த மைதானம் நன்கு ஒத்துழைக்கும் என்பதால் ரன் குவிக்க பேட்ஸ்மேன்  களுக்கு சிக்கல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.