tamilnadu

img

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சிஐ தற்போது அறிவித்துள்ளது.


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் வருகின்ற மே மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிகளுக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) தலைமை தேர்ந்தெடுப்பாளர் எம்.எஸ்.கே. பிரசாத் இன்று மும்பையில் அறிவித்தார்.


மொத்தம் 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் ரிசாப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் அண்மையில் நடந்த போட்டிகளில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அணியில் வாய்ப்பை பெற்றுள்ள கே.எல்.ராகுலுக்கு தனிப்பட்ட பணி அளிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்ந்தெடுப்பாளர் கூறியுள்ளார்.


உலகக்கோப்பைக்காக தேர்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி பின்வருமாறு,


விராட்கோலி(கேப்டன்)

ரோகித் சர்மா(துணை கேப்டன்)

சீகர் தவாண்

கே.எல்.ராகுல்

விஜய் சங்கர்

கேதார் ஜாதவ்

மகேந்திரசிங் தோனி(விக்கெட் கீப்பர்)

தினேஷ் கார்த்திக்

ரவீந்தர ஜடேஜா

யுஸ்வேந்திர சஹால்

குல்தீப் யாதவ்

ஹர்டிக் பாண்டியா

புவனேஸ்வர் குமார்

ஜஸ்ட்பிரித் பும்ரா

முகமது சமி