இந்தியா - ஆஸி., இன்று பலப்பரீட்சை
நேரம்: மதியம் 12:30 மணி (இந்திய நேரம்), இடம் : மெல்போர்ன்
கடந்த 2 வார காலமாக கிரிக்கெட் உலகில் பரபரப்பாக நடை பெற்று வந்த 7-வது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரின் இறுதிப் போட்டி விடு முறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியும்,இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
யாருக்குச் சாதகம்?
இந்த தொடரில் தோல்வி என் றால் என்னவென்று அறி யாமல் வெற்றி நடையுடன் வலம் வந்த இந்திய அணி அரையிறுதியில் மழை யின் உதவியால் இங்கிலாந்து அணியி டம் விளையாடாமலேயே இறுதிக்கு முன்னேறியது. அதே போல ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் மட்டும் இந்தியா விடம் தோல்வியை சந்தித்தது. அதன் பின் தொடர் வெற்றியின் மூலம் கடுமை யாகப் போராடி இறுதிக்கு முன்னேறி யது. இரு அணிகளும் தாங்கள் கடந்து வந்த பாதை மாறுபட்ட முறையில் இருக்கி றது. குறிப்பாக பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இரு அணிக ளும் சமபலத்தில் இருப்பதால் யாருக்கு வெற்றி தோல்வி எனத் திடமாகக் கருத்துக் கூற முடியாது. கோப்பையைக் கைப்பற்ற இந்திய அணிக்கு அனைத்து வாய்ப்புகள் இருந் தாலும் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக நினைக்காமல் விளை யாடினால் நல்லது. குறிப்பாக முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணியிடம் கற்ற பாடத்தின் மூலம் தான் ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் போராடி இறுதிக்கு முன்னேறியது. இதனால் ஒவ்வொரு கட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியைக் கவனமாகக் கையாண்டால் மட்டுமே கோப்பை யைப் பற்றி இந்திய அணி சிந்திக்க முடியும். சொந்த மண் மற்றும் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லக் கூடுதல் வாய்ப்புகளும் இருப் பதால் இறுதிப் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகி றது.
பரிசுத் தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கோப்பையுடன் ரூ.7.39 கோடி 2-ஆம் பிடிக்கும் அணிக்கு - ரூ.3.69 கோடி
மழை வருமா?
மெல்போர்ன் நகரில் ஞாயிறன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றாலும் பிற்பகலுக்குப் பின்பு வானிலையில் சற்று மாற்றம் ஏற்படும். அதாவது அந்நாட்டின் காலநிலைப்படி மதியம் 2 மணிக்கு மேல் குளிர்காற்று பலமாக வீசும். அவ்வாறு வீசும் பட்சத்தில் மழை பொழிய அதிக வாய்ப்புள்ளது.
சேனல்
இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (எச்டி தவிர) சேனலில் மகளிர் உலகக்கோப்பை டி-20 போட்டியைக் காணலாம். இந்த சேனல் அனைத்து வகை டிஷ் மற்றும் அரசு கேபிள் நிறுவனத்திலும் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளது. ஸ்மார்ட்போனில் ஹாட் ஸ்டார் கணக்கு இருந்தால் காணலாம். கணக்கு இல்லையென்றால் 5 நிமிடம் மட்டுமே இலவசமாகக் காண முடியும். (ஹாட் ஸ்டார் கணக்கு இருந்தால் மட்டும் போதாது மாதம் 299 ரூபாய் கட்டினால் மட்டுமே காண முடியும். வருடத்திற்கு 999 ரூபாய்)