மும்பை கிரிக்கெட் சங்கம்சார்பில் நடத்தப்படும் மும்பை டி-20 லீக் தொடருக்கான ஏலம் சனியன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் கிரிக் கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன்தெண்டுல்கரை ஆகாஷ் டைகர்ஸ் அணி ரூ.5 லட்சத்துக்குத் வாங்கியுள்ளது.இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூன் அதிவேகமாகப் பந்துவீசும் திறன் படைத்தவர். நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், பிரிதிவ் ஷா ஆகியோர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த டி-20தொடரில் களமிறங்குகிறார் கள்.8 அணிகள் பங்குபெறும் இந்த மும்பை டி-20 லீக் தொடர் மும்பையில் வரும் 14 ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.