tamilnadu

திண்டுக்கல் ஆட்டிறைச்சிக் கூடம் ஏலம்.... மாநகராட்சிக்கு ஒன்றரைக்கோடி இழப்பு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி ஆட்டிறைச்சிக் கூடம் ஏலம் விட்டதில் ஒன்றரைக்கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என பிற ஏலதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

திண்டுக்கல் ஆட்சிறைச்சிக்கூடம் ஏலம்தொடர்பாக அதிமுக பிரமுகர்களுக்கு மட்டும் ஏலம் படிவம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு படிவம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து திமுக பிரமுகர்கள் ஏலம்நடைபெற்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்கள் கூறியதாவது:திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஆட்டு இறைச்சிக்கூடத்தை திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டுள்ளது. கடந்தவருடம் ரூ.66 லட்சத்து 10 ஆயிரம் வரை ஏலம்கேட்கப்பட்டது. தற்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் ரூ.37 லட்சத்திற்கு தான் ஏலம்கேட்டுள்ளனர். இதற்கு ஆணையர் அனுமதிகொடுத்தால் மாநகராட்சியின் வருவாய் இழப்பு ஏற்படும். ன்றாண்டுகளுக்கு இதே ஏலம் தொடர்ந்தால் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படும். எனவே ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஆணையர் முன்வர வேண்டும, ரத்து செய்யப்படவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்கின்றனர் திமுக ஏலதாரர்கள்.