tamilnadu

img

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தது தமிழக அரசு

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாம்பரம், பல்லாவரம்,செம்பரம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 16வது மாநகராட்சியாக தாம்பரம் உருவாக உள்ளது. இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
கரூர் மாவட்டம் புஞ்சை  புகளூர், டி.என்.பி.எல் புகளூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சி உருவாக்கப்படும்.
இந்நிலையில் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி, உள்ளிட்ட நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  திருச்சி நாகர் கோவில், தஞ்சை, ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும்.