tamilnadu

img

41 நிலக்கரிச் சுரங்கங்கள் பெரு முதலாளிகளுக்கு ஏலம்...

புதுதில்லி:
நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் பெருமுதலாளிகளுக்கு சூறைவிடும் வகையில், ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ், தற்போது 41 நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக துவக்கி வைத்துள்ளார். அப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் உரை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
“எரிசக்தித் துறையில் இந்தியாவைத் தன்னம்பிக்கை கொள்ளவைக்க, இன்று ஒரு முக்கிய நடவடிக்கை (நிலக்கரி சுரங்க ஏலம்) துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்போது நாம் இறக்குமதி செய்யும் மின் தயாரிப்புகளில், எதிர்காலத்தில் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இருப்போம்” என்று அந்த உரையில் கூறியுள்ள மோடி, “உலகின் நான்காவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக நாம்  இருக்கும் நிலையில், ஏன், இந்த துறையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக நாம் மாறக் கூடாது?” என்றும் கேட்டுள்ளார்.

மேலும், “2030-க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிவாயுவாக்க இலக்கு வைத்துள்ளோம். இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது” என்று கூறியுள்ள மோடி, “நிலக்கரி ஏல செயல்முறை மூலம் மாநிலங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்” எனவும் ஆசை காட்டியுள்ளார்.