முற்றும் மோதல்
வங்கதேச கிரிக்கெட் அணி பிப்ரவரி - மார்ச் மாதங்களில் 2 டெஸ்ட், 3 டி-20 என இரண்டு விதமான கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதாகச் சர்வதேச சுற்றுப்பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்சனையைக் காரணம் காட்டி வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் விளை யாட மாட்டோம். அதற்குப் பதிலாக பொதுவான இடத்தில் அந்த தொடரை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தது. இதனைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்தது மட்டுமில்லாமல், வங்கதேசம் பாகிஸ்தான் வராததற்கு இந்தியா தான் காரணம் எனக் குற்றம் சாட்டியது. மேலும் வங்கதேச அணி பாகிஸ்தான் வராவிட்டால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் (ஐசிசி) புகார் அளிப்போம் என மிரட்டலும் விடுத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் கோரிக்கைக்கு இறங்கி வந்த வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டி களை கொண்ட தொடரில் ஒரு தொட ரைப் பாகிஸ்தானிலும், மற்றொரு தொடரை டாக்காவிலும் (வங்கதேச தலைநகர்) நடத்தலாம் என யோசனை வழங்கியது. இதற்குப் பாகிஸ்தான் வாரியம், “தனிப்பட்ட யோசனையை எங்களால் ஏற்க முடியாது. எங்களை வங்கதேசம் வருமாறு அழைப்பது விசித்திரமாக உள்ளது. இதனை நிராகரிக்கிறோம்” என வங்கதேச யோசனையைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நிராகரித்தது.