நோ-பாலுக்கு புதிய விதிமுறை
கிரிக்கெட் விளையாட்டில் அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலம் ரன்கள் தாறு மாறாக வழங்கக்கூடிய நோ - பால் பிரிவில் கள நடுவர்களின் சொதப்பலான செயலால் அடிக்கடி சர்ச்சை ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நோ - பால் பிரிவிற்கென தனியாக டிவி நடுவர் முறையை அறிமுகப்படுத்தியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் டி-20 போட்டியிலிருந்து (ஹைதராபாத், டிசம்பர்-6) நோ - பால் தொடர்பான புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.