தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டி யில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு ஆட்டத்தில் (விசாகப்பட்டினம், புனே) இந்திய அணி அபரா வெற்றி பெற்று தொட ரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சனியன்று தொடங்கியது. மந்தமான வானிலைக்கு நடுவே தொடங்கிய ராஞ்சி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - மயாங் அகர்வால் களமிறங்கினர். ரோஹித் சீரான வேகத்தில் ரன் குவிக்க அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலை யில், ரபடா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய புஜாரா (0) தங்க முட்டையுடன் அதே ரபடா பந்துவீச்சில் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார். கேப்டன் கோலியும் (12) ஆன்ரிச் பந்துவீச்சில் சொதப்ப, ரஹானே ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். போராட்டத்திற்குப் பலன் கிடைக்க இருவரும் சீரான வேகத்தில் ரன் குவித்து அரைசத மடித்தனர். அரைசத மடித்தவுடன் ரோஹித் சற்று அதிரடியாகக் களமிறங்கி சதமடித்து அசத்தினார்.
தேனீர் இடைவேளைக்கு முன்னரே வானிலை மந்தமாக இருந்ததால் (வெளிச்ச மின்மை காரணமாக) முதல் நாள் ஆட்டம் 2 மணிநேரத்திற்கு முன்னதாகவே முடிக்கப் படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று காலை 9:30 மணிக்கு தொடங்கு கிறது. நாளையும் மழைக்கு அதிக வாய்ப் புள்ளது என்பதால் ஆட்டத்திற்குக் குடைச்சல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.