தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி-20 தொடரின் போது இந்திய அணி ஜெர்ஸி ஸ்பான்ஸரை மாற்றியது. அதாவது சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான இணையக் கல்வி ஒப்போவை (OPPO) கழற்றிவிட்டு இணையக் கல்வி சார்ந்த நிறுவனமான பைஜூ`ஸ் (BYJU`S) நிறுவனம் புதிய ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பைஜூ’ஸ் நிறுவனத்தின் பணி
பைஜூ`ஸை பெங்களூரைச் சேர்ந்த ரவீந்திரன் உருவாக்கினார். இது கற்றல் பயன்பாடு (learning) தொடர்பான மென்பொருள் ஆகும். இது ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் டவுன்லோட் செய்யாமல் பயன்படுத்தலாம். இந்திய வட்டார மொழிகளின் பாடப்புத்தகம், மத்தியஅரசு பாடப்புத்தகம் (CBSE), போட்டித் தேர்வுகள், ஆட்சி பணி தேர்வு களின் குறிப்புகள் மற்றும் அவற்றின் சந்தேக ங்கள் அனைத்தும் இந்த அமைப்பில் உள் ளன. குறிப்பாகக்குழந்தைகளின் கல்விக்குச் சிறந்த பயன்பாடு உள்ள அமைப்பாக பைஜூ’ஸ் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.